News August 31, 2025

தமிழ் தலைவாஸ் அணி முதல் தோல்வி

image

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ்(TT) அணி முதல் தோல்வியை தழுவியது. யு மும்பை அணிக்கு எதிரான மோதலின் முதல் பாதியில் TT அணி 14-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் கடைசி 10 நிமிடங்களில் முன்னிலையை தக்க வைக்க தவறியதால் 36-33 என்ற கணக்கில் யு மும்பை வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜூன் தேஷ்வால் 12 புள்ளிகள் எடுத்தார். TT தனது அடுத்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது.

Similar News

News September 3, 2025

அரசின் அக்கறையின்மையால் பறிபோன உயிர்: EPS சாடல்

image

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததற்கு அரசின் அக்கறையின்மை தான் காரணம் என EPS சாடியுள்ளார். இப்படி பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன் என கேட்ட அவர், தீபா உயிரிழப்புக்கு திமுக அரசு முழு பொறுப்பேற்று நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளோடு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News September 3, 2025

BREAKING: வைரஸ் பரவல்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணியுமாறு நேற்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

News September 3, 2025

திருமணத்துக்கு அரசே பணம் கொடுக்கும் செம்ம திட்டம்!

image

சாதி மறுப்பு திருமணங்களை செய்யும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு Dr.அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தில் ₹2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற, தம்பதியருள் ஒருவர் SC/ST-ஆகவும், மற்றொருவர் BC/MBC-ஆகவும் இருக்க வேண்டும். தம்பதியினரின் மொத்த ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், திருமணமான 1 ஆண்டுக்குள் ambedkarfoundation@nic.in -ல் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!