News February 19, 2025
தமிழ்.. தமிழ்.. 60 ஆண்டாக பேச மட்டுமே செய்கின்றனர்: R.N.ரவி

TN அரசியல்வாதிகள், தமிழ் தமிழ் எனப் பேச மட்டுமே செய்வதாக R.N.ரவி விமர்சித்துள்ளார். 60 ஆண்டுகளாகவே தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எவ்வித சேவையையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், பாரதியார், கம்பர், வால்மீகி போன்றோரை பற்றி பேசுகிறோம்; போற்றுகிறோமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழின் பெருமையை பின்பற்றி நாம் பயணிக்கிறோமா என்பதும் கேள்விக்குறியே எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 21, 2025
6 வருடமாக சம்பளம் மறுப்பு… ஆசிரியை தற்கொலை

கேரளாவில் தனியார் பள்ளியில் பணியாற்றிய அலீனா பென்னி என்ற ஆசிரியைக்கு ஆறு ஆண்டுகளாக ஊதியம் தரப்படாததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோடன்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் பணியாற்றிய அவருக்கு பல ஆண்டுகளாக ஊதியம் வழங்காதது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
News February 21, 2025
பரபரப்புக்காக பேசுகிறார் அண்ணாமலை: திருமா சாடல்

அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசி வருவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருப்பதாகக் கூறிய அவர், நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்து அவர் அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவரது அணுகுமுறை தனக்கு வியப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
News February 21, 2025
டிராகன் படம்.. சிம்புவின் One-word ரிவ்யூ

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன்’ படம் நாளை வெளியாகிறது. படம் குறித்து சிம்பு ஒரு வரியில், ‘BlockBuster’ என ட்வீட் செய்துள்ளார். காலேஜ் ஸ்டூடண்ட்டின் கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் அனுபமா, கயடு, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். யாரெல்லாம் பட டிக்கெட் போட்டுடீங்க..?