News April 2, 2024

கனடாவில் தமிழ்நாட்டின் வெற்றித் திட்டம்

image

கனடாவில் தமிழ்நாட்டில் உள்ளதை போலவே பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். இந்தத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் கற்றல் திறனை மேம்படுத்த உதவும்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

அடுத்த 48 மணி நேரத்தில்.. கனமழை வெளுக்கும்!

image

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது 48 மணி நேரத்தில் வலுவடையும் என்றும் IMD கணித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. உங்க ஊரில் மழையா?

News August 12, 2025

பெண் கையை பிடித்து இழுத்தால் குற்றமா? தீர்ப்பு

image

திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த வழக்கில் முருகேசன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஒரு ஆண் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருப்பது குற்றமாகாது எனக்கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

News August 12, 2025

ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

image

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!