News October 2, 2025
தமிழகம் முழுவதும் இன்று மூடல்..

டாஸ்மாக் கடைகள் வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால், இன்று காந்தி ஜெயந்தி என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை பாயும். பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 2, 2025
RCB அணியை வாங்கப் போகிறாரா பூனாவல்லா?

சீரம் இன்ஸ்டிடியூட் CEO ஆதர் பூனாவல்லா போட்ட பதிவு பெரும் புயலை கிளப்பியுள்ளது. ‘நல்ல விலைக்கு, RCB ஒரு சிறந்த அணி’ என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பூனாவல்லா RCB அணியை வாங்க போகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. RCB-ஐ இப்போது வாங்குவதை விட சிறந்த முதலீடு எதுவும் இல்லை என அண்மையில் முன்னாள் IPL தலைவர் லலித் மோடி தெரிவித்த நிலையில், பூனாவல்லா இந்த பதிவை போட்டுள்ளார்.
News October 2, 2025
என்னது வெறும் ₹11-க்கே வியட்நாம் போகமுடியுமா?

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக வியட்நாமின் வியட்ஜெட் ஏர்லைன்ஸ் அதிரடி Offer-ஐ அறிவித்துள்ளது. அதாவது டிச.31ம் தேதி, 2025 வரை இந்தியாவில் இருந்து வியட்நாமுக்கு வெறும் ₹11-ல் flight டிக்கெட் எடுத்து போகலாமாம். ஆனால் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே புக்கிங், பொதுவிடுமுறைகளில் டிக்கெட் கிடைக்காது என பல நிபந்தனைகள் இருக்கிறது. வியட்ஜெட் ஏர்லைன்ஸ் Website-ல் தெரிந்துகொள்ளுங்கள்.
News October 2, 2025
BREAKING: விஜய் உடன் திமுக டீலிங்கா? திருமா

‘என் மீது கை வையுங்கள்’ என விஜய் சவால் விடுத்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்ய அரசும், காவல் துறையும் அச்சப்படுகிறதா அல்லது திமுக அரசுக்கும், விஜய்க்கும் மறைமுக டீலிங்கா என்ற கேள்வி எழுகிறது. அவர் மீது வழக்குப்பதியாதது குறித்த காரணத்தை காவல்துறை சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.