News September 10, 2025
இணக்கத்தை விரும்பும் தமிழகம்: ராஜகண்ணப்பன்

சில விஷயங்களில் மத்திய அரசு முரண்டு பிடிப்பதால், நாமும் முரண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது; ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற மனப்பான்மையே தமிழக அரசுக்கு உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் எனக் கூறிய அவர், நிதிநிலை மோசமாக இருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News September 10, 2025
விஜய்க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?

*திருச்சியில் பிரசாரம் செய்யும் விஜய் ரோடு ஷோ செல்லக் கூடாது; வாகனத்தில் அமர்ந்தபடியே வர வேண்டும் *விஜய்யின் பின்னால் 5-6 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும் *திருச்சியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, திருவெறும்பூர் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும் *பரப்புரையில் 25 நிமிடங்கள் உரையாற்ற வேண்டும் *சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக் கூடாது * பொதுமக்கள், வியாபாரிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.
News September 10, 2025
மகளிர் உரிமைத் தொகை குறித்து உதயநிதி அப்டேட்

விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி உறுதியளித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு செப்.15-ம் தேதி தான் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இத்திட்டத்தில் 1.2 கோடி பேர் மாதம் ₹1,000 பெற்று வருகின்றனர்.
News September 10, 2025
கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்திவந்த இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவில், கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் தலைவர் உயிர்தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணயக் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது விவாதமாகியுள்ளது.