News August 27, 2025

ட்ரம்புக்கு எதிராக களமிறங்கும் தமிழகம்!

image

ட்ரம்பின் வரிவிதிப்பை கண்டித்து தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. வரி விதிப்பால் பல உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் வர்த்தக போரைக் கண்டித்தும், ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டம் நடக்கவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Similar News

News August 27, 2025

Parenting: இத செஞ்சா உங்க குழந்தை உங்க பேச்ச கேட்கும்..

image

உங்கள் குழந்தை உங்கள் பேச்சை மதிப்பதே இல்லை என கவலையா? இந்த சிம்பிள் விஷயங்கள் உங்கள் மேல் உள்ள அவர்களது பார்வையை மாற்றும். ▶ காலையில் குழந்தையை அன்பாக எழுப்புங்கள் ▶அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயத்தையும் பாராட்டவும் ▶உணவு நேரத்தை இனிமையாக்குங்கள் ▶குழந்தைகள் முன் சண்டை வேண்டாம் ▶மற்றவர்கள் முன் அவர்களை திட்டக்கூடாது ▶கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட வேண்டாம். SHARE IT.

News August 27, 2025

இன்று ஒரே நாளில் ₹4,500 உயர்ந்தது

image

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்ப நினைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம்னி பஸ்களில் விமானத்தை விட கட்டணம் அதிகரித்துள்ளது. வழக்கமாக மதுரை – சென்னைக்கு ₹600 – ₹900 வசூலிக்கப்படும் நிலையில் இன்று ₹6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி – சென்னை ₹2,300, நாகர்கோவில் – சென்னை ₹4,500, நெல்லை – சென்னை ₹5,000 வரை உள்ளதால் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

News August 27, 2025

விஜய்க்கு வெளிநாட்டில் இருந்து வந்த அதிர்ச்சி

image

இந்தியாவுக்கு மீண்டும் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என விஜய் அண்மையில் கூறியிருந்தார். இதுபற்றி பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என்றும், கச்சத்தீவு இன்று மட்டுமில்லை என்றும் இலங்கையின் ஒரு பகுதி என்றார். தமிழகத்தில் தற்போது தேர்தல் காலம் என்பதால் வாக்குகளை பெற இதைப்போன்ற கருத்துகள் கூறப்படுவதாகவும் விமர்சித்தார்.

error: Content is protected !!