News March 15, 2025
வேளாண் துறையில் தமிழகம் 2வது இடம்

தமிழக பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, வேளாண் துறையில் இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2ஆம் இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் 3ஆம் இடத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News March 16, 2025
ஏ.ஆர்.ரகுமானுக்கு நெஞ்சு வலி

ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 16, 2025
தமிழ் மொழியை புகழ்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். சென்னை அருகே பண்ணூரில் பேசிய அவர், மொழியை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். தமிழ் மொழி வரலாற்று தொன்மை உடையது என்பதை ஏற்பதாகவும், உலக சொத்துக்களில் ஒன்றாக தமிழ் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
News March 16, 2025
சிக்கன் விலை உயர்ந்தது

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹104ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ ₹10 வரை உயர வாய்ப்புள்ளது. முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ₹65 ஆகவும் நீடிக்கிறது.