News June 25, 2024
தமிழ்நாடு எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு

மக்களவையில் உறுப்பினர்கள் 2ஆவது நாளாக பதவியேற்று வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியைச் சேர்ந்த 40 எம்.பிக்கள் தமிழில் பதவியேற்று வருகின்றனர். டி.ஆர்.பாலு, செல்வம், கெஜத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
Similar News
News December 29, 2025
கில்லால் அனைத்து ஃபார்மெட் கேப்டனாக முடியாது: Ex வீரர்

சுப்மன் கில் திறமையான வீரர்தான், ஆனால் பல நேரங்களில் சோம்பேறித்தனமான ஷாட்களை அடிப்பதாக Ex ENG வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தீவிரமும், ஆக்ரோஷமும் அனைத்து ஃபார்மெட் போட்டிகளிலும் வெளிப்பட்டதாகவும், ஆனால் அதை கில்லால் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் கில்லால் அனைத்து ஃபார்மெட்களுக்கும் கேப்டனாக செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
மகளிர் உரிமைத் தொகை ₹28,000.. CM ஸ்டாலின் அப்டேட்

திமுக ஆட்சியில் 1.30 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இதுவரை குடும்ப தலைவிகளுக்கு தலா ₹28,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
News December 29, 2025
புத்தகம் இருக்கும் கையில் பட்டாக்கத்தியா? EPS

வடமாநில இளைஞர் மீது நடத்தப்பட்ட <


