News April 4, 2024

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 (2)

image

2019 தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்து பார்த்தால், தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் பலவீனமாக உள்ளதாக தேர்தல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் திமுக 33.1%, காங்கிரஸ் 12.5%, இ.கம்யூ 2.4%, மா.கம்யூ 2.3%, விசிக 1.2%, இயூமுலீ 1.1% வாக்குகள் பெற்றன. மறுமுனையில் அதிமுக 19.1%, தேமுதிக 2.1%, எஸ்டிபிஐ 0.1% வாக்குகள் பெற்றன. பாஜக 3.6%, பாமக 5.3%, தமாகா 0.5% வாக்குகள் பெற்றன.

Similar News

News November 10, 2025

‘அம்மா SORRY.. என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்’

image

‘அம்மா என்னை மன்னித்துவிடு. என் கணவன் விரும்புவது என் உடலை மட்டுமே, மனதை அல்ல. என் சாவிற்கு மாமனார், மாமியார் உள்ளிட்டோர்தான் காரணம்’. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரேஷ்மாவின் கடைசி வரிகள் இவை. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை தனது பெற்றோரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News November 10, 2025

தேர்தலில் EPS-க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: RS பாரதி

image

பாஜகவுக்காக EPS நடத்திய அடிமை ஆட்சியால், நீட் முதல் மின்சாரம் வரை தமிழகத்தின் உரிமைகளை இழந்துள்ளதாக RS பாரதி விமர்சித்துள்ளார். மாநில மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் தரும் SIR-யை கண்டிக்க திராணியில்லாமல் EPS வக்காலத்து வாங்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு துணை போகும் EPS-க்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 10, 2025

யூடியூபரை மன்னிக்க முடியாது: கவுரி கிஷன்

image

நடிகை கவுரி கிஷனிடம் எடையை கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூபர் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது, மன்னிப்பே இல்லை என கவுரி பதிவிட்டுள்ளார். மேலும், அது ஒரு வேடிக்கையான கேள்வி என்று யூடியூபர் சொன்னதை சுட்டிக்காட்டிய அவர், பெயரளவுக்கான வருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!