News April 7, 2025
தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறைக்கு பின் கூடும் இன்றைய கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. பிரதமர் நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் பங்கேற்காதது குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 10, 2025
இம்மாத இறுதியில் வருகிறது VJS-ன் ‘Train’

விஜய் சேதுபதி – மிஸ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள Train திரைப்படத்தை நவ.28-ம் தேதி ரிலீஸ் செய்ய, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ருதி ஹாசன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு, மிஷ்கினே இசையமைத்துள்ளார். திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸுக்காக, விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ரசிகர்கள் நீண்ட நாள்களாக காத்திருக்கின்றனர்.
News November 10, 2025
விண்வெளியில் ஏப்பம் விடமுடியாது ஏன் தெரியுமா?

உணவுடன் விழுங்கப்படும் வாயு, பிறகு வாய் வழியாக வெளியேறுவதுதான் ஏப்பம். பூமியில் ஈர்ப்பு விசை காரணமாக நம்மால் ஏப்பம் விடமுடிகிறது. ஆனால், விண்வெளியில் ஈர்ப்பு விசை இருக்காது. இதனால் சாப்பிட்ட பின் வயிற்றில் வாயு, நீர், உணவு எல்லாம் கலந்த நிலையில் இருக்கிறது. இதிலிருந்து உடலால் வாயுவை மட்டும் பிரித்து வெளியேற்ற முடியாது. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News November 10, 2025
Tarrif: மோடி-டிரம்ப் நட்பு எங்கே? ரகுராம் ராஜன் கேள்வி

PAK-க்கு 19% வரியை மட்டுமே விதித்துள்ள USA, இந்தியாவுக்கு 50% வரியை விதித்துள்ளதாக RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார். வரி விதிப்பில், PM மோடி – டிரம்ப் நட்பு எங்கே என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதனால் எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 1971-ல் Indo-Pak போரின் போது PAK-க்கு சாதகமாக USA செயல்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறியுள்ளார்.


