News October 13, 2025

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

image

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை நாளை கூடுகிறது. சட்டசபை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. பின்னர், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்தக் கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தேர்தல் நெருங்குவதால் இக்கூட்டத் தொடரில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருங்காது.

Similar News

News March 20, 2026

ரயிலில் இரவு 10 – காலை 6 மணி ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

image

*இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை (Tier 3 AC, Sleeper) உபயோகிக்க வேண்டும் *ஷார்ட் சர்க்யூட்டை தவிர்க்க இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்கள் Off-ல் இருக்க வேண்டும் *இரவு 10 மணிக்கு மேல் அதிகமான சத்தத்துடன் பேசவோ, பாடல்கள் கேட்கவோ கூடாது *தேவையில்லாத போது மின் விளக்குகளை Off செய்ய வேண்டும் *உங்கள் டிக்கெட்டை TTE உடனடியாக செக் செய்யலாம்.

News March 20, 2026

இறப்பதை விட இருந்து போராட வேண்டும்: சீமான்

image

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் சிவா உயிரிழந்தது மிகுந்த மனவேதனை தந்ததாக சீமான் தெரிவித்துள்ளார். இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள் இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதை இனிவரும் தலைமுறையினருக்கு சொல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறந்தவரின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் சீமான் கூறியுள்ளார்.

News March 20, 2026

வரலாற்றில் இன்று

image

➤1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கான்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
➤ 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது
➤1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது.
➤1977 – தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை தழுவினார்.
➤2020 – நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!