News April 10, 2024
இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு

முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 54 மண்டலங்களுடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆயத்த ஆடைகள், தோல்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், முந்திரி பருப்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் 2ஆவது, பழங்கள் – காய்கறி ஏற்றுமதியில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
Similar News
News March 21, 2026
பெட்ரோல், டீசல் விலை.. இரவில் புதிய அறிவிப்பு

பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தது. அதன்படி நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. இதனால் பவர், எக்ஸ்பி 95, ஸ்பீடு பெட்ரோல்களின் விலை ₹108 வரையில் விற்கப்படுகிறது. ஆனால், சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹100.80, டீசல் ₹92.39-ஆகவும் உள்ளது.
News March 21, 2026
டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட மநீம விருப்பம்

மநீமவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி உதய சூரியனில் போட்டியிட திமுக கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், 6 தொகுதிகளை கேட்கும் மநீம, டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று சொல்வதால், பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில் கமல் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 100% டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுமாறு கமலிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 21, 2026
கேஸ் சிலிண்டர் புக்கிங் குறைந்தது: மத்திய அரசு

நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு பதற்றத்தால் அதிகரித்த முன்பதிவுகள் இப்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிவாயு முன்பதிவுகள் 89 லட்சத்திலிருந்து 55 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும், போதுமான சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சந்தை விற்பனையும் முழுமையாக தடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


