News May 27, 2024
உயர்கல்வித் துறையில் தமிழகம் முதலிடம்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் உயர்கல்வித் துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. திமுக அரசால் கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுள்ள தமிழக அரசு, புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்பில் முன்னணியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
Similar News
News September 17, 2025
அழகில் மயக்கும் அனீத் படா

‘சையாரா’ என்ற பாலிவுட் காதல் திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உணர்ச்சி மிக்க காதல் கதை கொண்ட ‘சையாரா’ கிளர்ச்சியூட்டும் இசையையும் கொண்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை அனீத் படாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அனீத் படாவின் அழகிய போட்டோஸ் மேலே இணைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்களுக்கு அனீத் படாவை ஏற்கெனவே தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
இன்றைய போர்களை கணிக்க முடியவில்லை: ராஜ்நாத் சிங்

கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்தியல், உயிரியல், கண்ணுக்கு தெரியாத சவால்களை எதிர்கொள்ள நமது ஆயுத படைகள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இன்றைய போர்கள் திடிரென ஏற்பட்டு, கணிக்க முடியாதவையாக மாறுவதாகவும், எனவே நமது எழுச்சித் திறன்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
News September 17, 2025
காலக்கெடு நிறைவு: இன்று முதல் ₹5,000 அபராதம்

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இனி புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளும். இனி அபராதம் செலுத்தினால் மட்டுமே ITR தாக்கல் செய்ய முடியும். அதன்படி, ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் ₹1,000, ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ₹5,000 செலுத்தி, வரும் டிச.,31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.