News September 5, 2025
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் No.1

NIRF தரவரிசை பட்டியலின்படி இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதில் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் 33 கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. 32 கல்லூரிகளுடன் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.
Similar News
News September 7, 2025
மூலிகை: நன்மைகள் கொட்டி கிடக்கும் கரிசலாங்கண்ணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*கரிசலாங்கண்ணியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
*நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் இது வெளியேற்றும்.
*குழந்தைகளுக்கு 2 சொட்டு கரிசலாங்கண்ணிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும்.
*மஞ்சள் காமாலை போன்ற அனைத்து வகை காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்து. SHARE IT.
News September 7, 2025
FLASH: சிக்கன் விலை உயர்ந்தது

நாமக்கல் மொத்த கொள்முதல் விலையில் இன்று(செப்.7) சிக்கன் கிலோவுக்கு ₹2 உயர்ந்துள்ளது. இதனால், கறிக்கோழி 1 கிலோ ₹100-க்கும், முட்டைக்கோழி ₹107-க்கும் விற்பனையாகிறது. முட்டையை பொறுத்தவரையில் கடந்த வார விலையான ₹5.15 ஆகவே நீடிக்கிறது. சென்னையில் சில்லறை விலையில் உயிருடன் கறிக்கோழி 1 கிலோ ₹130-க்கும், தோல் நீக்கிய கோழி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?
News September 7, 2025
இன்று சந்திர கிரகணம்.. முழு அடைப்பு

இன்று இரவு 9.56-க்கு நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் அதிகாலை 1.31 மணி வரை நீடிக்க உள்ளது. இதை பொதுமக்கள் வெறும் கண்களாலும் பார்க்கலாம். இதனிடையே, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்நடை காலை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதேபோல், திருச்செந்தூர் உள்ளிட்ட TN முக்கிய கோயில்கள், திருப்பதி ஏழுமலையான் கோயில்நடை பிற்பகல் 2 மணிக்கே அடைக்கப்பட்டு நாளை காலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.