News August 21, 2024
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: இன்று தொடக்கம்

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2024ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். சென்னையில் உள்ள லீலா பேலஸில், இன்று காலை 10 மணிக்கு விழா நடைபெறுகிறது. ₹17,616 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்து, ₹51,157 கோடி முதலீடு கொண்ட 28 திட்டங்களுக்கு CM அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் 1,06,803 வேலை வாய்ப்புகள் உருவாகுமென, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 31, 2026
CSK-வின் தோல்விக்கு முக்கிய காரணங்கள்

*ஆடுகளத்தின் தன்மையை CSK வீரர்கள் தவறாக கணித்தது போல் தெரிந்தது *விக்கெட் சரிவை பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் அதிரடியாக ஆடியது *8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஒரு 50+ பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை *Off Spin வீசக்கூடிய மேத்யூ ஷார்ட்டை ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷிக்கு எதிராக பயன்படுத்தவில்லை *முக்கியமான கேட்ச்சுகளை கார்த்திக் சர்மா, மேட் ஹென்றி தவறவிட்டனர். அடுத்த போட்டிக்கு CSK 11-ல் என்ன மாற்றங்கள் தேவை?
News March 31, 2026
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தின் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வானகரம், சூரப்பட்டு, ஆத்தூர் உள்ளிட்ட 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5%-7% அதிகரிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப் போன்ற லேசான வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ₹10 முதல் ₹40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ₹50 முதல் ₹200 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
News March 31, 2026
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது *பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் *இதயம் சொல்வதை செய் வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு


