News August 6, 2024

படுபாதாளத்திற்கு சென்ற தமிழக தொழில்துறை: இபிஎஸ்

image

தொழில்துறையை திமுக அரசு படுபாதாளத்திற்கு தள்ளியதாக, இபிஎஸ் கண்டனம் தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பின் தொழில் நிறுவனங்களுக்கு 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அண்டை மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆனால், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக வெறும் தம்பட்டம் மட்டுமே திமுக அடிப்பதாகவும் விமர்சித்தார்.

Similar News

News April 2, 2026

ஆண்களை திருமண வலையில் வீழ்த்திய பலே கில்லாடி

image

ராஜஸ்தானில் திருமண ஆசை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய ரேகா கவுர் என்பவரை போலீஸ் தேடி வருகிறது. திருமணம் முடிந்தவுடன் மணமகனின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பிப்பதே அவரது வாடிக்கையாகும். இந்நிலையில் விக்ரம்ஜீத்தை மணந்த ரேகா கவுர், அவருடைய வீட்டில் இருந்து தப்பிக்க மாமியாருக்கு விஷம் வைத்துள்ளார். முதலில் ரேகா கவுர் காணாமல் போனதாக எண்ணிய விக்ரம்ஜீத், பின்னர் உண்மையை அறிந்து மனமுடைந்தார்.

News April 2, 2026

அதிமுகவுக்கு தாவிய தவெகவினர்

image

தவெகவின் தலைமை மீதான அதிருப்தியில் அக்கட்சியை சேர்ந்த 25-க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொருளாளா் ADS சுரேஷ், துணை செயலாளர் சசிகலா, உள்ளிட்டோர் தவெகவில் இருந்து விலகி, ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மா.செ., சுகுமார் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில், தவெகவினர் அதிமுகவில் இணைந்ததால் தவெக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

News April 2, 2026

தவெக, நாதகவை கண்டுகொள்ளாத ஸ்டாலின்

image

தேர்தல் பிரசாரங்களில் பாஜக, அதிமுகவை கடுமையாக விமர்சிக்கும் ஸ்டாலின், தவெக & நாதக பற்றி பேசுவதை தவிர்க்கிறார். அக்கட்சிகளின் தலைவர்களான விஜய்யும், சீமானும் தன்னை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றி ஸ்டாலின் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. போட்டியிலேயே இல்லாத அவர்களை பற்றிப் பேசி பெரிய ஆளாக்கிட வேண்டாம் என ஸ்டாலின் எண்ணுவதாகவும், இது சாதுர்யமான நகர்வு என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!