News August 7, 2025
கொலைநாடாக மாறிய தமிழ்நாடு: OPS விளாசல்

TN-ல் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல் என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக OPS சாடியுள்ளார். திருப்பூர் SSI கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், மதுவால் தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 10, 2026
பெட்ரோல், டீசல் விலை ரூ.22 உயர்வு… எங்கு தெரியுமா?

ஈரான் போர் காரணமாக இந்தியா உள்பட உலகில் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு இப்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளையும் லிட்டருக்கு (இலங்கை கரன்சியில்) ரூ.22 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் எரிபொருள் விலை உயராது என அரசு அறிவித்துள்ளது நிம்மதி அளித்தாலும், சர்வதேச நிலைமைகளால் சூழல் மாறலாம்.
News March 10, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட்

TN உள்பட 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, TN-க்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.
News March 10, 2026
புதிய கவர்னர் மார்ச் 12-ல் பொறுப்பேற்பு

தமிழகத்தின் தற்காலிக கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மார்ச் 12-ல் பொறுப்பேற்கவுள்ளார். மக்கள் மாளிகையில் நடக்கும் நிகழ்வில் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். கேரளத்தின் ஆளுநராக உள்ள அவர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவுள்ளார். முன்னதாக, TN கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்தின் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.


