News August 4, 2024
கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், ராசி பலன் போல கொலைப் பட்டியலை நாளிதழில் பிரசுரிப்பது சட்ட ஒழுங்கு சீர்கேட்டை காட்டுவதாக சாடினார். வளர்ச்சி என்பது விளம்பரங்களால் வராது, சீரான சட்டம் ஒழுங்கே அதற்கான அடிப்படை எனவும் கூறினார்.
Similar News
News March 27, 2026
இந்தியாவுக்கு பக்கத்தில் இன்னொரு போர் வெடித்தது

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் போரை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஆப்கனின் எல்லையில் PAK குண்டுகளை வீசியதில் இருவர் உயிரிழந்ததோடு, 8 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆப்கன்தான் முதலில் தாக்குதலை தொடங்கியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
News March 27, 2026
புதிய கூட்டணி அமைக்கிறார் வேல்முருகன்

50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தவாக உடன் இணைய தயாராக உள்ளதாக வேல்முருகன் கூறியுள்ளார். அனைவரும் ஒன்று கூடி, முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறிய அவர், எதிர்காலத்தில் நாதக உடன் கூட்டணி வைப்பது குறித்து சிந்திக்கலாம் என்றார். மேலும், திமுக, அதிமுக, பாஜகவால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை சிறு கட்சிகளிடையே நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
விஜய் – த்ரிஷா.. வைரலாகும் ஆர்த்தியின் பதிவு

ஒரு மனைவிக்கான அனுதாபம் அவரது கணவரின் மார்க்கெட் வேல்யூவை பொறுத்ததா என்று ஆர்த்தி தனது இன்ஸ்டா பதிவில் கேட்டுள்ளார். கடந்த ஆண்டு ரவி மோகன் – கெனிஷா விவகாரம் வெடித்தபோது தனக்கு பெரிதாக ஆதரவு இல்லை, குரல்கள் எழவில்லை. ஆனால், விஜய் – சங்கீதா, த்ரிஷா விவகாரத்தில் சங்கீதாவுக்கு பேராதரவு கிடைத்தது குறித்து அவர் மறைமுகமாக இப்படி சொல்வதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?


