News April 25, 2024
தமிழ்நாடு அரசின் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 13 வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்க சென்னையில் ₹500, பிற மாவட்ட தலைநகரங்களுக்கு ₹200 பயிற்சிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 18 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <
Similar News
News March 3, 2026
நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறாரா விஜய்?

தஞ்சையில் நாளை தவெக நிர்வாகிகளை விஜய் சந்திக்கவிருக்கும் நிலையில், தற்போது தேர்தல் அறிக்கைக் குழுவுடன் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளையை நிர்வாகிகள் சந்திப்பின்போது தவெகவின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, திமுகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
News March 3, 2026
கனடாவிடம் யுரேனியம் வாங்கும் இந்தியா!

அரிய வகை கனிமங்கள் துறையில் இந்தியா-கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PM மோடி – கனடா PM மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அணுசக்தி தேவைக்காக, ₹24,000 கோடி மதிப்பிலான யுரேனியத்தை 2035 ஆண்டு வரை கனடா வழங்கும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது எனக் கூறப்படுகிறது.
News March 3, 2026
இன்று மாலை 3:20-க்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க..

‘பிளட் மூன்’ எனப்படும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. நிலா அடர் ஆரஞ்ச் நிறத்தில், நீல விளிம்புடன் ஒளிரவுள்ளது. சென்னையில் இந்த கிரகணத்தின் இறுதி பகுதி மட்டுமே தெரியுமாம். மாலை 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:47 மணி வரை நிலா ரத்த சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ளதாம். தொலைநோக்கி வழியாக இந்த கிரகணத்தை மக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


