News August 2, 2024
கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், +2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் சேரும்போது அவர்களுக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
இனி பெட்ரோல், டீசல் வேண்டாம்: அமைச்சர்

இந்தியாவில் காற்று மாசை குறைக்க பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பயோ எரிபொருள்களை உருவாக்கவேண்டும் என நிதின் கட்கரி கூறியுள்ளார். ஒரு நாட்டுக்கு பொருளாதாரமும், சுற்றுச்சூழலும் முக்கியம் என்ற அவர், இந்தியாவில் 40% காற்று மாசு வாகன புகையால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார். எனவே, மாற்று எரிபொருளை உருவாக்கினால் பெட்ரோல் இறக்குமதி செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் காக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
2026-ல் மெகா ட்ரீட்டுக்கு ரெடியாகும் சூர்யா!

‘கங்குவா’, ‘ரெட்ரோ’ போன்ற படங்கள் ஏமாற்றிய நிலையில், 2026-ல் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்க சூர்யா ரெடியாவதாக கூறப்படுகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் ‘கருப்பு’ படம் ஜனவரி 23-ம் தேதி வெளிவரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரியின் ’சூர்யா 47’ சம்மருக்கு வெளியாகும் என்றும் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரலாம் எனவும் பேசப்படுகிறது.
News November 26, 2025
செங்கோட்டையனுடன் திமுக அமைச்சர்.. திடீர் திருப்பம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செங்கோட்டையனை திமுக முக்கிய அமைச்சர் சற்றுமுன் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது திமுகவில் இணைய வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


