News October 26, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும்… தமிழக அரசு ஏற்பாடு

TN-ல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள், இம்மாதமே வழங்கப்பட்டு வருகின்றன. பருவமழை தொடங்கியதால், அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை முன்கூட்டி வழங்க அரசு உத்தரவிட்டது. தீபாவளிக்கு பின் ரேஷன் கடைகளில் நவம்பருக்கான பொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளன. ஆனால், பல இடங்களில் ரேஷன் பொருள்களை வழங்குவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உங்க பகுதியில் விநியோகம் சீராக உள்ளதா?
Similar News
News October 26, 2025
‘வந்தே மாதரம்’ பாடலை கொண்டாட PM அழைப்பு

PM மோடி இன்று 127-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அதில், வரும் நவ.7-ம் தேதியன்று நாம் வந்தே மாதரம் பாடல் இயற்றி 150-வது ஆண்டில் நுழைய இருக்கிறோம். இதை நினைவில் கொள்ளத்தக்க ஒன்றாக மாற்ற வேண்டும், வரும் தலைமுறையினருக்காக இந்த கலாச்சாரத் தொடரை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும். மேலும், ஆபரேஷன் சிந்தூர், நமது பண்டிகைகளை மேலும் வண்ணமயமாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
News October 26, 2025
பிக் பாஸ் Wild Card Entry இவரா? கம்ருதீனுக்கு செக்!

பிக் பாஸ் சீசன் 9-ல் Wild Card மூலம் 4 போட்டியாளர்கள் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், மகாநதி சீரியலில் கம்ருதீனுக்கு மனைவியாக நடித்த திவ்யா இந்த வாரம் முதலில் எண்ட்ரீ கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும், கம்ருதீனுக்கும் ஏற்கெனவே பிரச்னை இருப்பதாக கூறப்படும் நிலையில், இவர் வந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எண்ணி பிக் பாஸ் குழு இவரை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறதாம்.
News October 26, 2025
தலையணையில் இப்படி ஒரு ஆபத்தா?

தலையணை இருந்தால் மட்டும்தான் இங்கு பலருக்கும் தூக்கம். தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என தலையணை வைத்து தூங்குபவர்கள் பலர். ஆனால், Amerisleep பவுண்டேஷனின் ஆய்வில், தலையணை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி துவைக்காத, அழுக்குப் படிந்த தலையணை உறைகளில், டாய்லெட் சீட்டில் உள்ளதைவிட 17,000% கிருமிகள் உள்ளதாம். இதனால் சரும பிரச்னைகள் உள்பட பல பாதிப்புகள் ஏற்படுமாம்.


