News June 27, 2024
ஊக்கத்தொகையை ₹7 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு

தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற 2,860 வீரர்களுக்கு ₹102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 16 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர் என்றார். அத்துடன், அவர்களுக்கான ஊக்கத்தொகை ₹7 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News March 2, 2026
காங். இன்றி திமுகவுக்கு கஷ்டம்: நிர்மல் குமார்

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. மற்றொரு புறம் <<19279246>>ராகுல் காந்தி<<>> தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைக் கூட தாண்ட முடியாது என தவெக நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News March 2, 2026
சற்றுமுன்: விஜய் கொந்தளித்தார்

திருச்சியில் அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் சித்ரவதை செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், விஜய் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்குச் சான்றாகும் என சாடியுள்ள தவெக, குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும் மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
News March 2, 2026
தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்?

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள். வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


