News April 29, 2025
தமிழக அரசுக்கு ₹50 லட்சம் அபராதம்

தனியார் கல்லூரிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் 8 வாரங்களில் ஊதியம் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், ₹50 லட்சம் அபராதத்துடன் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த அபராதத் தொகையில் ₹25 லட்சத்தை கல்லூரி கல்வி இயக்குநரிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை நாளில் வணங்க வேண்டிய கடவுள்கள்!

அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். விஷ்ணுவை வணங்குவது செல்வம், மகிழ்ச்சியை கொடுக்கும். லட்சுமியை வணங்குவது பணம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். விநாயகரை வணங்குவது தடைகளை நீக்கும். குபேரனை வணங்குவது செல்வத்தை கொடுக்கும். சிவனை வணங்குவது மன அமைதியை கொடுக்கும். SHARE IT.
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க சிறப்பு சலுகை!

அட்சய திருதியையொட்டி பல நகைக் கடைகள் தங்கம் வாங்கச் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விற்பனை குறைந்துள்ளது. இதனால், இன்று பவுனுக்கு குறிப்பிட்ட சதவீத விலை குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தை விற்பனை செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. அட்சய திருதியை நாளான இன்று(ஏப்.30) தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News April 30, 2025
நாளை சூரியின் ட்ரீட்!

‘மாமன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக, சூரி அறிவித்துள்ளார். ஹீரோவாக அறிமுகமானது முதல் இதுவரை சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது முதன்முறையாக குடும்ப உறவுகள் பற்றிய படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். அதேபோல், ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ‘விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.