News August 21, 2025
பொங்கல் பரிசு ₹5,000 வழங்க தமிழக அரசு முடிவு?

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 வழங்க TN அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நிதியை திரட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். 2021 தேர்தல் சமயத்தில், இதேபோல் தான் அப்போதைய அதிமுக அரசு ₹2,500 பொங்கல் பரிசு வழங்கியது. கடந்த முறை திமுக அரசில் பொங்கல் தொகை வழங்கப்படவில்லை.
Similar News
News August 21, 2025
BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில், வரும் 26-ம் தேதி திட்ட விரிவாக்கத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் நிலையில், தற்போது விரிவாக்கம் செய்வதன் மூலம், மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.
News August 21, 2025
Post Man மூலம் Mutual Fund திட்டம்.. விரைவில் அமல்

தபால்காரர்கள் மூலம் பொதுமக்களை மியூச்சுவல் ஃபண்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா, பிஹார், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 1 லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் ‘மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்’ என அழைக்கப்படுவர்.
News August 21, 2025
தவெக மாநாட்டில் 40 அடி உயர கொடிக்கம்பம்

தவெக மாநாட்டில் புதிதாக 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நேற்று பிற்பகல் <<17463695>>100 அடி உயர கொடிக்கம்பத்தை<<>> கிரேன் கொண்டு நிறுவ முயன்ற போது கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் கொடிக்கம்பம் நிறுவும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடைக்கு அருகே 40 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவியுள்ளனர். புதிய இடத்தை N.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் பார்வையிட்டனர்.