News December 31, 2024
அதானி நிறுவன டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறைந்த தொகையை அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த போதிலும், அந்நிறுவனத்தின் ஊழல் புகார் சர்ச்சை காரணமாக டெண்டர் வழங்கப்படவில்லை. விவசாய இணைப்புகள் தவிர மற்ற மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படவுள்ளன. இத்திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என அன்புமணி உள்ளிட்டோர் TN அரசிடம் வலியுறுத்தி இருந்தனர்.
Similar News
News July 11, 2025
எமர்ஜென்சி ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர்

‘எமர்ஜென்சி’ காலம் இந்தியாவின் கருப்பு அத்தியாயம் என்றும் காங்., MP சசி தரூர் கூறியுள்ளார். பிரபல நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, கட்டாய கருத்தடை திட்டத்தை அமல்படுத்தியது அக்கால அவலத்துக்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். MP-க்கள் குழுவுக்கு தலைமை தாங்கியது முதலே சசியின் காற்று பாஜக பக்கம் வீசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News July 11, 2025
நாடக உலகின் ஜாம்பவான் ஃபிராங்க் பேர்ரி காலமானார்

5 தசாப்தங்களாக நாடக உலகில் அசத்தி ‘Acting legend’ அழைக்கப்பட்ட ஃபிராங்க் பேர்ரி(88) காலமானார். 1959-ல் நாடக உலகில் அறிமுகமான இவர், ‘Bristol Old Vic’ நாடகத்தை 53 நாடுகளில் அரங்கேற்றியுள்ளார். ஷேக்ஸ்பியரின் கதைகளில் நடித்துப் பிரபலமான இவருக்கு, உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. உடல் நலக்குறைவால் காலமான ஃபிராங்க் பேர்ரிக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News July 11, 2025
முறியடிப்பதற்கே சாதனைகள்: லாரா

டெஸ்டில் 4 சதங்கள் சாதனையை முறியடிக்க <<16984490>>வாய்ப்பு கிடைத்தால்<<>>, அதை செய்ய வேண்டுமென வெ.இண்டீஸ் லெஜண்ட் பிரயன் லாரா தனக்கு ஆலோசனை கூறியதாக SA கேப்டன் வியான் முல்டர் தெரிவித்துள்ளார். ‘உங்களுடைய லெகசியை நீங்கள் உருவாக்க வேண்டும். சாதனைகள் முறியடிப்பதற்கே’ என்று லாரா அப்போது கூறியுள்ளார். லாராவின் சாதனையை(400*) முறியடிக்க முனையாமல், 367* ரன்னில் முல்டர் டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.