News February 24, 2025
தமிழக மீனவர்கள் கைது: அண்ணாமலை கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News February 24, 2025
காலை அலாரம் அடித்த பிறகு தான் எழுந்திருக்கிறீர்களா?

தினமும் காலையில் அலாரம் அடித்த பிறகு தான், கண்விழித்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. திடீரென சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure சட்டென அதிகரிக்குமாம். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய பிரச்னைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள். இதற்கு Morning Blood Pressure Surge எனப் பெயர்.
News February 24, 2025
காய்கறி விலை கடும் சரிவு

வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை மளமளவென குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சந்தைகளில் சராசரியாக ஒரு கிலோ பீன்ஸ் – ₹35, பீட்ரூட் – ₹15, கேரட் – ₹40, தேங்காய் (பெரியது)- ₹25 – ₹40, தக்காளி – ₹15 – ₹20, உருளைக்கிழங்கு – ₹22, இஞ்சி – ₹40, சின்ன வெங்காயம் – ₹25, கொத்தமல்லி ஒரு கட்டு – ₹6க்கு விற்பனையாகிறது. விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 24, 2025
ஜெர்மனியில் ஆட்சி மாற்றம்?

ஜெர்மனியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சிகளான கன்சர்வேட்டிவ் CDU/CSU 28.5%, AFD 20%, ஆளும் சமூக ஜனநாயக கட்சி 16.5% வாக்குகளைப் பெறும் என கூறப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அரசு அமையும் என்று கருதப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி டிரம்ப், நெதன்யாகு ஆகியோர், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.