News March 3, 2025
தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான்: முதல்வர்

தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாகையில் நடந்த விழாவில் பேசிய அவர், கடந்த 10 வருடங்களில் இலங்கை கடற்படையால் 3,656 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்றார். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மத்திய அரசு விளையாடக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News January 6, 2026
அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம்: CPM

கூட்டணி ஆட்சியா? தனித்த ஆட்சியா? என்ற பிரச்னைக்கு, அதிமுகவும், பாஜகவும் முதலில் முடிவு காணவேண்டும் என CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என பேசும் அதேசமயம், EPS தனித்த ஆட்சி என பேசி வருவதாக விமர்சித்துள்ளார். அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றும் பாஜக, தைரியமாக கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News January 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 6, மார்கழி 22 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News January 6, 2026
அதிமுக, பாஜகவுக்கு 3-வது இடம்: ஐ.பெரியசாமி

தமிழக அரசியல் பற்றிய கணிப்பு அமித்ஷாவுக்கு தெரியாது என அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். பிஹார், மகாராஷ்டிரா போல் தமிழ்நாடு இல்லை என தெரிவித்த அவர், பாஜக, அதிமுக இடையே கூட்டணி இருக்கிறதா எனவும் கேள்வியெழுப்பினார். மேலும் அந்த கூட்டணிக்கு 2026 தேர்தலில் 3-வது இடம்தான் கிடைக்கும் எனவும் திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


