News November 1, 2024
தமிழ்நாடு நாள்: குழப்பம் ஏன்?

1956ஆம் ஆண்டு நவ.1 அன்று மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு அப்போது மெட்ராஸ் மாநிலமாக இருந்தது. இப்பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்ற, ஜூலை 18, 1968-ல் அண்ணாதுரை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். தனி மாநிலம் அமைந்த நாளான நவ.1 தான் முதலில் தமிழ்நாடு நாளாக இருந்தது. ஆனால், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18, இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.
Similar News
News March 10, 2025
பருப்புகளுக்கு 10% இறக்குமதி வரி விதிப்பு

பருப்பு இறக்குமதிக்கு 10% வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க, மசூர் உள்ளிட்ட பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும், துவரை உள்ளிட்ட பிற பருப்புகளுக்கு இறக்குமதியை மே 31 வரை நீட்டிப்பதாகவும் கூறியுள்ளது. இதுவரை பருப்பு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 10% வரி விதிப்பால் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News March 10, 2025
கல்வி ஞானத்தை வழங்கும் ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்.
பொருள்:
ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.
News March 10, 2025
சமையலுக்கு உகந்த எண்ணெய் எது?

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை தற்போது பூதாகரமாகியுள்ளது. அதிலும் குழந்தைகள் மத்தியில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூட, எண்ணெய் அளவை 10% குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு தீர்வு இருக்கிறது. நம்ம ஊரை பொறுத்தவரை நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தான். ஆகவே அதை யூஸ் பண்ணுங்க. பொரித்த எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தவே கூடாது. That’s All.