News March 21, 2024
தமிழ்நாடு காங். வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்றிரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற இதுதான் சரியான நேரம்!

‘வைட்டமின் டி’ என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது சூரிய ஒளி தான். ஆனால் சூரிய ஒளியை பெற சரியான நேரம் எது என பலருக்கும் தெரியாது. ‘வைட்டமின் டி’ பெற காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறந்த நேரம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சூரியனின் புற ஊதா கதிர்கள் வலுவாக இருப்பதால், தோல் ‘வைட்டமின் டி’ யை திறம்பட உற்பத்தி செய்ய உதவுமாம்.
News December 16, 2025
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் சார்ஜ் ஷீட் தாக்கல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜம்மு சிறப்பு கோர்ட்டில் NIA தாக்கல் செய்தது. 1597 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு மற்றும் அதன் நிழல் அமைப்பான எதிப்பு முன்னணி உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
News December 16, 2025
வரலாற்றில் இன்று

*1770–இசைமேதை பீத்தோவன் பிறந்தநாள்.
*1928 – சென்னை மாகாண முதல் CM பனகல் அரசர் நினைவு நாள்.
*1971 – போரில் இந்தியா ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர்.
*1971 – பிரிட்டனிடம் இருந்து பஹ்ரைன் அரசு விடுதலை பெற்றது.
*1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.


