News October 12, 2025
ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம்

<<17955513>>ரவுடி நாகேந்திரன்<<>> உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியான நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி அக். 9-ம் தேதி இறந்தார். உடல் வியாசர்பாடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நாகேந்திரனின் உடல் முன்பு அவரது 2-வது மகன் அஜித் ராஜா கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்டார்.
Similar News
News April 5, 2026
உத்தரவிட்டார் காஞ்சி ஆட்சியர்!

வாலாஜாபாத் அடுத்த குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த பரத் மீது கொலை முயற்சி மற்றும் கஞ்சா உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பரத்தை குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் அடைக்க காஞ்சிபுரம் எஸ். பி. ஜவகர் பரிந்துரைத்த நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா ஓராண்டு குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
News April 5, 2026
முதல் வெற்றியை பதிவு செய்யுமா CSK?

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL போட்டியில், இன்று CSK -RCB பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியனான RCB 2-வது வெற்றியை ருசிக்க கடுமையாக போட்டியிடும். அதேநேரம், 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியைச் சந்தித்த CSK, இப்போட்டியில் மீண்டெழ வேண்டும் என்ற கட்டாயத்தில் டஃப் ஃபைட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி பற்றி உங்கள் கணிப்பு என்ன?
News April 5, 2026
அதிமுகவில் இணைந்த தவாக வேட்பாளர்.. வேல்முருகன் ஷாக்!

வேப்பனப்பள்ளி தொகுதி தவாக வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான தி.க.குமார், KP முனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் 200-க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்தார். திமுக கூட்டணியில் இருந்து பிரிந்த தவாக பெரிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தேர்தலில் களம் காண்கிறது. இந்நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்பாளரான தி.க.குமார் அதிமுகவுக்கு சென்றது வேல்முருகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


