News March 20, 2025

தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு!

image

தெலங்கானாவில் ரயில்வே லோகோ பைலட் தேர்வு மையம் அமைக்கப்பட்டதற்கு தமிழக தேர்வர்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தேர்வு மையத்தை மாற்றுமாறு கூறியும் ரயில்வே அதை ஏற்காததால், வேறு வழியின்றி தமிழக தேர்வர்கள் நேற்று நடக்கவிருந்த தேர்வுக்காக ஐதராபாத் சென்றிருந்தனர். ஆனால், அதன் பிறகே தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதனால், தமிழக தேர்வர்கள் அதிருப்தியடைந்தனர்.

Similar News

News March 20, 2025

குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க பிளீஸ்…

image

பிறந்து ஒரு வயதான குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுப்பதில் மிக கவனம் தேவை. பெரியவர்கள் போல் அவர்களுக்கு ஜீரண சக்தி இருக்காது என்பதால் நட்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பாக்கெட் பால், தேன், கடினமான காய்கறிகள், திராட்சை, கடல் சார்ந்த உணவுகள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. மிட்டாய்களை கொடுக்கவே கூடாது. கடைகளில் வாங்கும் பிஸ்கட் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.

News March 20, 2025

IPL-ல் அந்த தடை நீங்கியது – பவுலர்களுக்கு குட் நியூஸ்!

image

பந்தில் எச்சிலை தேய்ப்பது மூலம் பவுலர்கள் எளிதாக ஸ்விங் செய்ய முடியும். கொரோனா காலத்தில், நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இதற்கு ஐசிசி தடை விதித்தது. தற்போதுவரை சர்வதேச போட்டிகளில் இத்தடை தொடரும் நிலையில், IPL-ல் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பந்தில் எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ நீக்கியுள்ளது. சர்வதேசப் போட்டிகளுக்கும் தடை நீங்குமா? உங்கள் கருத்து என்ன?

News March 20, 2025

மரணம்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி: ப.சி., வேதனை

image

நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில், 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம், அமைதிக்கு இந்த படுகொலைகள் தீர்வாகுமா என வினவியுள்ள அவர், ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போரில், காசா மக்கள்தான் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி மரணிப்பதுதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!