News April 16, 2025

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

image

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நாளை கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், அமைச்சரவைக் கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து, அதுதொடர்பாக சட்டப்பேரவையில் அரசு அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News January 3, 2026

வீட்டில் வளர்க்கக் கூடிய மூலிகை செடிகள்

image

உங்கள் வீட்டின் பால்கனியை எளிதாக தோட்டமாக மாற்றலாம். பெரும்பாலானோர் அழகு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் செலுத்துவார்கள். தினசரி பயன்பாடு மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளையும் எளிதாக வளர்க்கலாம். அந்த செடிகள் சிலவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். நீங்க என்ன செடி வளர்க்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.

News January 3, 2026

திமுகவுக்கு தகுதி இல்லை: சீமான்

image

இலக்கு வைத்து மது விற்கும் திமுக அரசுக்கு, போதை ஒழிப்பு பற்றி பேச தகுதி இல்லை என சீமான் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், உங்களுக்கு தெரியாமல் போதை பொருள் நாட்டிற்குள் வருகிறது என்று சொல்ல வெட்கமாக இல்லையா என்றும், போதைக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அதனை விற்பீர்களா என்றும் கேட்டுள்ளார். போதையை ஒழிப்பேன் என கூறுவதெல்லாம் வேடிக்கை எனவும் விமர்சித்துள்ளார்.

News January 3, 2026

காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

image

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!