News January 2, 2025
வாள்வீச்சில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை!!

தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, கேரளாவின் கண்ணூரில் ஃபென்சிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, கேரள வாள்வீச்சு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் சீனியர் தேசிய வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தேசிய அளவில் அவர் வென்ற 12வது பதக்கம் இது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய ஃபென்சர் பவானி தேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 8, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிர்ச்சியை கொடுக்கின்றன. 2021-ல் சிவகாசியில் 14 வயதான பள்ளி மாணவியை சித்தப்பா முறை கொண்டவரே கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது, இந்த வழக்கில் குற்றவாளிக்கு 82 ஆண்டுகள் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பள்ளிப் பையை சுமக்க வேண்டிய சிறுமி குழந்தையை சுமப்பதை என்ன சொல்வது?
News January 8, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜன.10 வரை நீட்டித்து TN அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். www.dge.tn.gov.in தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி HM வசம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT
News January 8, 2026
பொங்கலுக்கு முன்… இதை மறந்தும் கூட செய்யாதீங்க

இயற்கை பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருள்கள் தீயிட்டுக் கொளுத்தி நமது முன்னோர்கள் போகியை கொண்டாடினர். ஆனால், தற்போது பழைய பிளாஸ்டிக் பொருள்கள், டயர், டியூப் போன்றவற்றை எரிப்பதால், காற்றுமாசு ஏற்படுவதோடு, மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போகி அன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.


