News August 9, 2024
இன்று வெளியான தமிழ் படங்கள்

பிரசாந்த் நடித்து நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த ‘அந்தகன்’ இன்று வெளியாகியுள்ளது. ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக். சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர்களின் வளர்ச்சிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்து ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’ வெளியாகியுள்ளது. ரஞ்சித் நடித்த ‘கவுண்டம் பாளையம்’ பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
Similar News
News December 7, 2025
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி!

கிரேக்கத்தின் கிரீட் தீவு அருகே, புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய பயன்படுத்தப்படும் முக்கிய நுழைவாயிலாக கிரீஸ் உள்ளது. இந்நிலையில், இந்த படகு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 7, 2025
அறிவாலயம் சுடுகாடு மாதிரி: நாஞ்சில் சம்பத்

திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும், தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், ஆனால், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் லேப்டாப் வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
சற்றுமுன்: விலை தாறுமாறாக குறைந்தது

கனமழை காரணமாக கடந்த வாரம் முதல் தொடர்ந்து காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று ₹10 முதல் ₹20 வரை குறைந்துள்ளது. ₹70-க்கு விற்பனையான தக்காளி ₹40-க்கும், வெங்காயம் ₹20-க்கும், உருளைக்கிழக்கு ₹40-க்கும், குடைமிளகாய் ₹40-க்கும், பாகற்காய் ₹35-க்கும், கேரட் ₹50-க்கும், முள்ளங்கி ₹25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.


