News July 13, 2024
தமிழ் சினிமா இயக்குநர் தற்கொலை

மனோஜ், குணால் நடிப்பில் “வருஷமெல்லாம் வசந்தம்” திரைப்படத்தை இயக்கிய ரவி ஷங்கர், நேற்றிரவு கே.கே.நகரில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாக்யராஜ், விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல, இன்றும் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் ‘சூர்யவம்சம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
Similar News
News November 21, 2025
அழுகிய மனைவி உடல்.. கொடூர கணவன் சிக்கினான்

குஜராத், பவ்நகரில் நடந்துள்ள கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான கம்பலா, சக பெண் அலுவலருடன் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அவரது மனைவி, மகள்(13), மகன்(9) திடீரென காணாமல் போயுள்ளனர். போலீஸின் தீவிர விசாரணையில் கம்பலா வீட்டருகிலேயே 3 பேரின் அழுகிய உடல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கொலை செய்ததாக கம்பலா கைது செய்யப்பட்டுள்ளார்.
News November 21, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தொடங்கியுள்ளன. தகுதியுள்ள மாணவர்கள், ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது சான்று நகல், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு 18 வயது வரை தமிழக அரசு மாதம் ₹2,000 வழங்க உள்ளது.
News November 21, 2025
கூட்டணி பேச்சுவார்த்தை: காங்., குழு அமைப்பு?

2026 தேர்தலில் திமுக – காங்., கூட்டணி உறுதியான நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த காங்., தலைமை குழு அமைத்துள்ளதாம். கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சுரே ஜெக்டே, நிவேதி ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 18 இடங்களில் வென்றது. 2026-ல் காங்., எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்?


