News November 24, 2024
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்… ஸ்டாலின் விருப்பம்

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இருக்க வேண்டும் என்று CM ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை பொன்விழா ஆண்டு இசை விழாவில் பேசிய அவர், இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும், செழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு என்றும், அந்த இரண்டையும் கண்போல காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் காெண்டார்.
Similar News
News November 14, 2025
குமரி: போக்சோ வழக்கில் 40 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின்.
இந்த வருடத்தில் மட்டும் 40 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
News November 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 14, 2025
Sports Roundup: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

*8 அணிகள் பங்கேற்கும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. *குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் 2.6 கோடிக்கு MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். *Bondi ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலகக் கோப்பை செஸ் 4-வது ரவுண்டில் பிரக்ஞானந்தா தோல்வி. *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார்.


