News November 14, 2024
தமிழ் நாகரிகம் என்றால் இளக்காரமா?: மதுரை MP

தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற திரைமறைவு வேலைகள் துவங்கிவிட்டதாக சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக போராடி கல்வெட்டுகளை தமிழகம் கொண்டு வந்தால், கட்டிடம் இன்மை என்ற காரணம் கூறி மீண்டும் மாற்ற முயல்வதா எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், சரஸ்வதி நாகரிகம் என்றால் கோடிகளை அள்ளித்தருவார்கள். தமிழ் நாகரிகம் என்றால் கட்டிடம் பழசு என காரணம் கூறுவார்கள் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News March 13, 2026
ஈரான் போர்: 4-வது விமானத்தை இழந்த அமெரிக்கா

ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 6 பணியாளர்களை தேடும் பணி தொடர்வதாகவும், இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலால் அல்ல எனவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 2 விமானங்கள் மோதியதில் ஒன்று விபத்துக்குள்ளாக, மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது. இதற்குமுன் குவைத்தில் 3 போர் விமானங்களை அமெரிக்கா இழந்தது.
News March 13, 2026
இதுவா இந்தியாவின் ராஜதந்திரம்? ப.சிதம்பரம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தாலும், போரில் மரணித்தவர்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். USA உள்பட 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ரஷ்யா & சீனா இதற்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை என்றும் அவர் கேட்டுள்ளார்.
News March 13, 2026
பெட்ரோல், கேஸ் சிலிண்டர்.. அடுத்த அதிர்ச்சி

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகவே உள்ளதாகவும், சில கட்டுப்பாடுகள் என்பது தற்காலிகமானதே என அரசு கூறியிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை இருமடங்கு உயர்ந்ததால், நேற்று இரவு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சில பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், ஹோட்டல்களில் உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


