News March 17, 2024
ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் தமிழ் சினிமா

இந்த ஆண்டு இதுவரை தமிழில் 52 படங்கள் வெளியான நிலையில், ஒரு படம் கூட பெரிய வெற்றியைப் பெறவில்லை. புளூ ஸ்டார், லவ்வர் போன்ற ஒரு சில படங்கள் கவனம் ஈர்த்தன. பெரிய பட்ஜெட்டில் வெளியான கேப்டன் மில்லர், லால் சலாம், அயலான் போன்ற படங்கள் கூட பெரிதாக வெற்றிபெறவில்லை. GOAT, விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் படங்களைத்தான் கோலிவுட் பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்க எந்த படத்திற்கு வெயிட்டிங்?
Similar News
News November 16, 2025
தேசிய பத்திரிகை தினம்: ஸ்டாலின் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக பத்திரிகைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் தோல்விகள், ஊழல்கள், வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள் என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். <<-se>>#Nationalpressday<<>>
News November 16, 2025
₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை: அடடே அரசு திட்டம்!

உங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவ செலவு அதிகமாக ஆகிறதா? மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மூலம் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சைக்காக ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை கிடைக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News November 16, 2025
6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

124 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் இந்தியா, தெ.ஆ., அணியின் பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இந்திய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. அக்சர், குல்தீப் களத்தில் உள்ளனர். ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வார் என எதிர்பார்த்த ஜடேஜாவும் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.


