News February 28, 2025
தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து கடன் வாங்கியது: சு.சாமி

சமஸ்கிருதத்தில் இருந்து கடன் பெறப்பட்ட 40% சொற்கள் தமிழில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இதற்கு நல்ல உதாரணம் துர்கா ஸ்டாலினும், கருணாநிதி என்ற பெயர்கள்தான் என்றும், ஹிந்தியை எதிர்க்கும் திமுகவின் மனநிலையை கற்பனை செய்து பாருங்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஒரு தமிழனாக சமஸ்கிருத ஹிந்தியை கற்க விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2025
ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
News February 28, 2025
இட்லிக்குள் ஊடுருவும் நச்சு ரசாயனங்கள்

சாலையோர உணவகங்கள் மற்றும் சில கடைகளில் இட்லி வேகவைக்கும் தட்டில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறது. நீராவியில் வேகும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள bisphenol A (BPA), phthalates, ஹார்மோனை சீர்குலைக்கும் ரசாயனங்கள், டயாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் போன்ற நச்சுப் பொருட்கள் இட்லியில் கலந்துவிடுகின்றன. இந்த இட்லிகளை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
News February 28, 2025
சிரியாவில் 1,000 பேர் கொடூர கொலை

சிரியாவில் 1,000க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அல் ஆஸாத் அதிபராக (2000-2024) பதவி வகித்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு, டமாஸ்கஸ் ராணுவ விமான நிலைய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு அண்மையில் தோண்டப்பட்ட குழியில் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.