News December 21, 2024
பெங்களூருவில் தமிழ் புத்தகத் திருவிழா

பெங்களூருவில் 3ஆவது தமிழ் புத்தகத் திருவிழாவை, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தொடங்கி வைத்தார். சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி டிச.29ஆம் தேதி வரை நடைபெறும். நாள்தோறும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
₹48,000 சம்பளம்.. 2,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

பேங்க் ஆஃப் பரோடாவில் (BOB) காலியாகவுள்ள 2,500 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 21 – 30. ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் & நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ₹48,480 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 24. இதுகுறித்து மேலும் அறிய & மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
சஞ்சு சாம்சனுக்கு டிமாண்ட்? KCL ஏலத்தில் அதிர்ச்சி

கேரளா கிரிக்கெட் லீக் சீசன் 2, ஆக.21 – செப்.6 வரை நடைபெறவுள்ளது. 6 அணிகள் இந்த டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், இதற்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், சஞ்சு சாம்சனை ₹26.8 லட்சத்துக்கு கொச்சி புளூ டைகர்ஸ் அணி வாங்கியுள்ளது. ஆனால் இந்த ஏலத்தில் ஒரு அணி ₹50 லட்சம் மட்டுமே செலவிட முடியும். இதன் மூலம் பாதிக்கு மேலான ஏல செலவினத் தொகையில் சஞ்சு எடுக்கப்பட்டுள்ளார்.