News September 4, 2025
விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு ‘நோ’: ஐஸ்வர்யா

விஜய்யே அழைத்தாலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் நகைக்கடை விழாவில் பங்கேற்ற அவரிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவருக்கான வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனக்கு அரசியலில் நாட்டம் இல்லை என்றார். அண்மையில் நடிகை அம்பிகா, தான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 5, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.5) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,865-க்கும், ஒரு சவரன் ₹78,920-க்கும் விற்பனையாகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று சவரனுக்கு ₹80 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தை கண்டு, சவரன் ₹79,000-ஐ நெருங்கியுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹137-க்கு விற்பனையாகிறது.
News September 5, 2025
பாஜகவின் குரலாக மாறிய EPS: தங்கம் தென்னரசு சாடல்

GST-ல் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை <<17609719>>EPS வரவேற்றதை<<>> சுட்டிக்காட்டி, கடுமையான விமர்சனங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்துள்ளார். பாஜகவின் குரலாக EPS மாறிவிட்டதாக சாடிய அவர், மக்களின் பக்கம் அதிமுக நிற்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார். மேலும், மத்திய அரசு முறையான நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்பதை, ஏன் ஒரு வரியில் கூட EPS குறிப்பிடவில்லை எனவும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 5, 2025
ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்.. யார் யாருக்கு லாபம்?

GST மறுசீரமைப்புக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இன்று(செப்.5) வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 294 புள்ளிகள் உயர்ந்து 81,012 புள்ளிகளிலும், நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24,818 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. HDFC Life, Wipro, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டுள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?