News April 22, 2025
கவலைக்கிடமான நிலையில் உதவி கேட்கும் தமிழ் நடிகர்

புற்று நோயால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வரும் நடிகர் சூப்பர் குட் <<16171338>>சுப்பிரமணி <<>>மீண்டும் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. இந்நிலையில், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி & வீட்டு வாடகைக்கு பணம் இல்லை. வசதி படைத்த நடிகர்கள் & அரசு தனக்கு உதவ வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 22, 2025
இன்றே சிறை தண்டனை.. இன்றே விடுதலை!

முன்னாள் AUS கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டருக்கு இன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்றே விடுதலையும் செய்யப்பட்டார். குடும்ப வன்முறை, பெண்ணை பின் தொடர்ந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 2024 ஏப்ரலில் கஸ்டடியில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 375 நாள்கள் கஸ்டடி காலத்தில் அவர் ஒழுக்கமாகவும், விதிகளை பின்பற்றியதாகவும் கூறி அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
News April 22, 2025
தீவிரவாத தாக்குதல்.. ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News April 22, 2025
NEP குறித்து ஸ்டாலின் படிக்க வேண்டும்: ஃபட்னாவிஸ் பதிலடி

NEP என்றால் என்ன என்பதை மு.க.ஸ்டாலின் சரியாகப் படிக்க வேண்டும் என ஃபட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். NEP ஒருபோதும் மொழித் தேர்வை வலியுறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை. 3 மொழிகளில் ஆங்கிலத்தை தவிர வேறு 2 இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மகராஷ்டிராவில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்ததை சுட்டிக்காட்டி ஃபட்னாவிஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.