News October 11, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீரில் இறுதி அஞ்சலி

image

மூத்த ஒளிப்பதிவாளரும், நடிகருமான <<17975436>>பாபு(88) இன்று காலமானார்<<>>. உடல்நலக் குறைவால் சென்னை தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. பாபுவின் உடலுக்கு திரைபிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மூத்த மகன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து கொண்டிருக்கிறார். நாளை பகல் 12 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். RIP

Similar News

News April 6, 2026

காஞ்சிபுரம்: இன்னும் சிலிண்டர் புக் பண்ணலயா..?

image

காஞ்சிபுரத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

BREAKING: நடிகை சுபாஷினி தற்கொலை

image

சென்னை, ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடிகை சுபாஷினி(36) தற்கொலை செய்துகொண்டார். பிரபலமான ‘கயல்’ சீரியல் மற்றும் சில படங்களில் நடித்து வரும் இவர் இலங்கையை சேர்ந்தவராவார். கணவருடன் பெங்களூருவில் வசித்து வரும் இவர், போரூரில் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தபோது இந்த முடிவை எடுத்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #RIP

News April 6, 2026

ஈரான் மீது USA அணுகுண்டு வீசினால் என்ன ஆகும்?

image

ஒருவேளை ஈரான் மீது USA அணுகுண்டு வீசினால், வீசிய 10 வினாடியில் அந்நாடே தரைமட்டமாகிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் தாக்கம் 50 கி.மீ வரை பரவி, மக்கள் தீயில் கருகிவிடுவார்கள். சுமார் 50 லட்சம் டன் கரியமில வாயு புகை விண்ணில் எழுந்து சூரிய ஒளியை தடுக்கும். இதனால் புவி வெப்பம் குறைந்து, அமில மழை பொழியலாம். விவசாயம் அழிந்து, துருக்கி, PAK என அருகிலுள்ள நாடுகள் பஞ்சத்தில் வாடும். #போர்_வேண்டாம்

error: Content is protected !!