News October 23, 2025

தமிழ் நடிகர் காலமானார்.. முதல் ஆளாக ஓடிய பிரபல நடிகர்

image

நடிகரும், ஆச்சி மனோரமாவின் மகனுமான பூபதி காலமானார். அவர் இறந்த செய்தியை கேட்டவுடன் நடிகர் கார்த்தி முதல் ஆளாக நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரை தொடர்ந்து நடிகர் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பிறகு நாளை உடல் அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Similar News

News October 24, 2025

ALERT: இந்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழை பெய்யும்

image

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

தாறுமாறாக மாறும் தங்கம் விலை

image

கடந்த வாரம் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை, இந்த வாரம் சற்று தணிந்து ₹5,600 சரிவைக் கண்டுள்ளது. இது மேலும் சரியக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு, மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கிக் குவிப்பது, சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறையாதது போன்ற காரணங்களால், நாளை தங்கம் விலை சற்று அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கணிக்கின்றனர்.

News October 24, 2025

இவர்தான் அடுத்த தலைமை நீதிபதியா?

image

வரும் நவ.23-ம் தேதியுடன் CJI BR கவாய் 65 வயதை எட்டுவதால், ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அடுத்த CJI-க்கான தேடலில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் தகுதியானவரை பரிந்துரைக்க கோரி BR கவாயிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய CJI-க்கான ரேஸில் மூத்த நீதிபதி சூர்ய காந்த் முன்னிலையில் உள்ளார். அவரே நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!