News March 16, 2024
புளியந்தோப்பு: ரூ.8.84 கோடியில் சிறுவர் பூங்கா

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நீர்வளத்துறை சார்பில், சமுத்திரம் ஏரியில் ரூ.8.84 கோடி மதிப்பில் புதிதாக சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (16.03.2024) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
தஞ்சை: இடிந்தது விழுந்த பள்ளியின் சுவர்!

தஞ்சையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடு கட்டிடம் உள்ளிட்டவை இடிபாடுகளில் சிக்கி உள்ளன. இந்நிலையில் நேற்று (டிச. 01) தஞ்சாவூர் பிளாக் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பள்ளி மாணவர்களும், சாலையில் நடந்து செல்வோரும் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இதனை சரி செய்யும் பணிகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது.
News December 2, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் நேற்று (டிச.01) குருங்குளம் மேற்கு ஊராட்சி அற்புதபுரம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 04-ந்தேதி அன்று நடைபெற உள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


