News March 2, 2025

அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் தமாகா

image

அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் GK வாசன் அறிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, நீட் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறிய அவர், தீர்க்கப்படாத பல பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் நடப்பதாகவும் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, பாஜகவும் இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

Similar News

News April 11, 2026

மதுரை மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

image

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளா் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 129 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுவது உறுதியானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். குறைந்தபட்சமாக மதுரை தெற்கு தொகுதியில் 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News April 11, 2026

170 வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன்

image

தவாக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பட்டியலை வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 170 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார் தொகுதிகளான கொளத்தூரில் ஊர்மிளா, எடப்பாடியில் கோவிந்தராஜ், திருச்சி கிழக்கில் ராயல் ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இக்கூட்டணிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News April 11, 2026

விஜய்க்கு ஆதரவாக நானா? பார்த்திபன் மறுப்பு

image

விஜய் தான் அடுத்த CM என பார்த்திபன் கூறியதாக செய்தி பரவியது. இந்நிலையில், இதுபோன்ற கருத்தை தான் தெரிவிக்கவில்லை என அவர் மறுத்துள்ளார். மேலும், இந்த செய்தியை வெளியிட்ட நபரிடம், தான் பேசியதற்கான proof உங்களிடம் உள்ளதா என கேட்டேன். அந்த நபரிடம் proof இல்லததால், போஸ்ட்டை உடனே remove செய்துவிட்டார் எனக்கூறிய பார்த்திபன், இதுபோன்ற செய்தியை வெளியிடுவதற்கு முன் யோசித்து செயல்படவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!