News December 5, 2024
பெண்களுக்கு எதிரான தலிபான் அரசு முடிவு…ரஷீத் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தலிபான் அரசு தடை விதித்ததற்கு வருத்தம் தெரிவித்து அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வலியுறுத்தியுள்ளார். கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துவதாகச் சுட்டிக்காட்டி, அனைவருக்குமே கல்வி வழங்குவது சமூக பொறுப்பல்ல, அது தார்மீக கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 25, 2025
வங்கி கடன் EMI குறைகிறது

வங்கிகளில் லோன் வாங்கியோருக்கு மகிழ்ச்சியான செய்தியை RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6%-ஆக இருந்த ரெப்போ, கடந்த ஜூனில் 5.5%ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 0.5% குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனால், வீடு, வாகன, தனி நபர் உள்ளிட்ட கடன்களுக்கான EMI தொகை குறைய வாய்ப்புள்ளது. SHARE IT
News November 25, 2025
ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் கியூஷூ பிராந்தியத்தில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தான் ஜப்பான் அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
News November 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளை கண்காணிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். ஏரிகள், அணைகள் உள்ளிட்டவற்றின் நீர் இருப்பை முழு கொள்ளளவில் இருந்து 20% வரை குறைக்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


