News October 25, 2025

லஞ்ச் சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடுறீங்களா.. ஆபத்து!

image

பொதுவாக, குட்டித்தூக்கம் உற்சாகத்தை தரும் என்பார்கள். இதனால் பலரும் மதியம் சாப்பிட்டபின், ஒரு குட்டித்தூக்கம் போடுவது வழக்கம். ஆனால், தினசரி குட்டித்தூக்கம் போடுபவர்களுக்கு high BP வரும் வாய்ப்பு 12%, மாரடைப்பு ஆபத்து 24% அதிகரிக்கிறதாம். பிரிட்டனில் 3,60,000 பேரிடம் 11 yrs செய்த ஆய்வில் இதை கண்டறிந்துள்ளனர். குட்டித் தூக்கத்தால் இரவுத் தூக்கம் பாதிப்பதே, பிரச்னைக்கு முக்கிய காரணமாம். SHARE IT.

Similar News

News January 15, 2026

ஜன நாயகனுக்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவு!

image

’உண்மை எங்கே இருக்கிறது’ என விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் X-ல் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் சென்சார் வழக்கில் சென்னை HC-ன் உத்தரவை எதிர்த்து KVN நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை SC இன்று தள்ளுபடி செய்தது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், பி.சி.ஸ்ரீராமின் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

News January 15, 2026

விரைவில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் FTA ஒப்பந்தம்

image

வரும் ஜன.27-ல் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாகிறது. மிகப்பெரிய FTA ஒப்பந்தமாக கருதப்படும் இது, உலகின் 25% மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல் பொருள்களுக்கான வரி குறைய வாய்ப்புள்ளது. இதில் விவசாயப் பொருள்கள் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News January 15, 2026

போர் முழக்கத்தை உணர்த்தும் பீட்சா?

image

US-ன் பென்டகன் மாளிகையை சுற்றி பீட்சா விற்பனை அதிகரித்திருப்பது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், US ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும்போது பென்டகனில் பணியாற்றுவோர் அதிகளவு பீட்சா ஆர்டர் செய்வார்களாம். இதன் அடிப்படையில், நாளை தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையில்லை என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!