News December 6, 2024

நோட் பண்ணுங்க.. இன்ஸ்டாவில் சூப்பர் வசதி வந்திருக்கு..!

image

பயனர்களை கவரும் வகையில் புதுபுது அப்டேட்களை இன்ஸ்டாகிராம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மெசேஜ்களை Schedule செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜை டைப் செய்துவிட்டு Send பட்டனை Long Press செய்தால் Schedule ஆப்ஷன் காட்டும். அதில் மெசேஜ் Send ஆக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை செலக்ட் செய்யலாம். சமீபத்தில் லைவ் லொகேஷன் ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது.

Similar News

News January 26, 2026

தேர்தலை குறிவைத்து பத்ம விருதுகள்: கார்த்தி சிதம்பரம்

image

இந்தாண்டுக்கான பத்மவிருதுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் அதனை காங்., MP கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை இருந்திருந்தால், பத்மவிருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது அரசுக்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும் என்றும், ஆனால் இப்போது அது மிகவும் எளிது; தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளார்.

News January 26, 2026

ஒரு யூனிட் மின்சாரம் ₹3.50-க்கு கிடைக்க வாய்ப்பு!

image

மகாராஷ்டிராவில் 2 தோரியம் அடிப்படையிலான மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. உலகளவில் யுரேனியம் மூலம் அதிக மின்சாரம் பெறப்படும் நிலையில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற குறைந்த விலையில் மின்சாரம் இனி கிடைக்கும். TN-ல் தற்போது பயன்பாட்டை பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ₹4.95 – ₹12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.

News January 26, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

error: Content is protected !!