News June 17, 2024
கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்!

உடலில் பக்கவாதம் ஏற்படுவதை போல, கண்களில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, கண் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால், கண்களில் பக்கவாதம் ஏற்படுவதாகவும், வெயிலால் வரும் அதீத வெப்பம் இதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பதாலும், அதிகளவில் தண்ணீர் குடிப்பதாலும் இதை தடுக்கலாம் என்கின்றனர்.
Similar News
News April 9, 2026
தேர்தலில் வாக்குகளை பிரிக்கப் போவது யார்?

2021 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், 200 தொகுதிகளின் முடிவுகள் 3-ம் அணியை பொறுத்து மாறுமாம். அதாவது அதிமுக, திமுக கூட்டணிகள் தவிர, பிறகட்சிகள் பெறும் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும். உதாரணத்துக்கு 2021-ல் 83 தொகுதிகளில் நாதக பெற்ற வாக்குகள், அத்தொகுதிகளின் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகம். இம்முறை தவெகவும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், 2026 தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கும்?
News April 9, 2026
நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு.. மக்களுக்கு ஏமாற்றம்

திமுக, அதிமுக, பாமக, அமமுக, <<19607806>>காங்கிரஸ்<<>> என பல முன்னணிக் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை எந்த கட்சியும் வாக்குறுதியாக அளிக்கவில்லை. இதனால், தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2021-ல் 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
News April 9, 2026
மாம்பழம் முடக்கமா? ராமதாஸுக்கு பின்னடைவு

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய மேல்முறையீடு வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பு கோரிக்கையை 3-வது முறையாக HC நிராகரித்துள்ளது. மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டு விட்டதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோரிக்கை ஏற்கப்படாததால் ராமதாஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


